Thursday, 2 February 2012

சிலேடை புலவர் காளமேக பாடல்கள் கேட்டு, சிறு வயதில் நானும் முயற்சி செய்து எழுதிய பாடல்கள். தவறு இருப்பின் பொறுத்து அருள்க :

வாசல் கட்டுறும், வளர்த்தோர்
காணாது விடின் வாடும் -குலை
குலைக்கும் சீவல மங்கை -தென்
கலை நாட்டில் நாயாகும வாழை மரம் .

இரவுகண் விழிக்கும், சந்திரன் கண்டலரும்,
மென் சிறகடித்து சிலிர்க்கும் சீவல மங்கை
தென்கலை நாட்டில் ஆந்தையும் அல்லியாகும்

உச்சிதனில் ஓடிருக்கும், உள்ளிருக்கும் உயிர்  காக்கும்
இட்டவிடம் விட்டகல இன்னும் பல யுகமாகும் 
இச்சகத்தை ஆளுகின்ற ஈசனாடும் அம்பலத்தில் 
அத்தனயும் உள்ள்ளடக்கும் ஆமையும் வீடாகும்.

உச்சிதனில் கொம்பிருக்கும் காலடியில் பிளந்து நிற்கும்
நின்றவிடம் நீங்காது நெடும்காலம் அசை போடும் 
மை-தனில் கன்றாகும், மா  வென்றே  தானழைக்கும்,
ஆ-வும் மா-வுமாகும் 





No comments:

Post a Comment